• Jul 14 2025

திருமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

Chithra / Jul 14th 2025, 12:09 pm
image


 

திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, எதிர்புப்  பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம்; பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, 

அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காய் போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்புப் பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தை  சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இவ் கையெழுத்து போராட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டதையும் காணமுடிந்தது.


திருமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டம்  திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, எதிர்புப்  பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம்; பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காய் போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்புப் பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இப்போராட்டத்தை  சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இவ் கையெழுத்து போராட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டதையும் காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement