• Jul 28 2025

NPP பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் கைது!

shanuja / Jul 28th 2025, 1:11 pm
image

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


33 வயதான சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். 


வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை.


இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NPP பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் கைது வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement