சிறுமி ஒருவரைக் கழுத்து நெரித்து கொலை செய்த பின்னர் சிறுமியின் சடலத்துடன் உடலுறவில் இருந்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தமிழகத்தின் நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் (வயது -26), கஞ்சா போதைக்கு அடிமையாகி, 17 வயது சிறுமியுடன் உறவில் இருந்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அறிந்தததையடுத்து, மாரிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பிணையில் விடுதலையாகி வந்த அன்றைய தினமே, சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற மாரிமுத்து, பணம் கேட்டதற்காக அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் சிறுமி உயிரிழந்த பிறகும் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியையே அதிர வைத்துள்ளது.
அதனையடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த வேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் ஏதோவொரு வகையில் குற்றச் சம்பவங்கள் இடம்பெற்று வருவது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
கழுத்தை நெரித்து சிறுமி கொலை; சடலத்துடனும் உடலுறவு - தமிழகத்தில் நிகழ்ந்த கொடூரம் சிறுமி ஒருவரைக் கழுத்து நெரித்து கொலை செய்த பின்னர் சிறுமியின் சடலத்துடன் உடலுறவில் இருந்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தமிழகத்தின் நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் (வயது -26), கஞ்சா போதைக்கு அடிமையாகி, 17 வயது சிறுமியுடன் உறவில் இருந்துள்ளார்.இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அறிந்தததையடுத்து, மாரிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். பிணையில் விடுதலையாகி வந்த அன்றைய தினமே, சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற மாரிமுத்து, பணம் கேட்டதற்காக அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமி உயிரிழந்த பிறகும் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியையே அதிர வைத்துள்ளது. அதனையடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த வேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் ஏதோவொரு வகையில் குற்றச் சம்பவங்கள் இடம்பெற்று வருவது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.