• Jul 28 2025

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வீதிகளுக்கு கொங்கீறிட் இடும் பணிகள் ஆரம்பம்!

shanuja / Jul 28th 2025, 1:07 pm
image

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி  சுப்பிரமணிய குருக்கள் வீதி , 01 ம் குறுக்கு வீதிகளில்  கொங்கிறீட் விதியாக செப்பனிடும் பணிகள் இன்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் 130 மீட்டர் கிரவல் வீதி, 04 மில்லியன் செலவில் புனரமைப்புச் செய்யப்படுகின்றது. 


ஆரம்ப நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன், களுவாஞ்சிக்குடி கிராம தலைவர்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 


நீண்ட நாட்களாக கிரவல் வீதியாக காணப்பட்ட வீதியினூடாக , மழைகாலத்தில் பயணம் செய்ய முடியாத நிலையில் , கிராம மக்களால் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு  வரப்பட்ட நிலையில் குறித்த வீதியின் புனரமைப்பு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வீதிகளுக்கு கொங்கீறிட் இடும் பணிகள் ஆரம்பம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி  சுப்பிரமணிய குருக்கள் வீதி , 01 ம் குறுக்கு வீதிகளில்  கொங்கிறீட் விதியாக செப்பனிடும் பணிகள் இன்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் 130 மீட்டர் கிரவல் வீதி, 04 மில்லியன் செலவில் புனரமைப்புச் செய்யப்படுகின்றது. ஆரம்ப நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன், களுவாஞ்சிக்குடி கிராம தலைவர்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நீண்ட நாட்களாக கிரவல் வீதியாக காணப்பட்ட வீதியினூடாக , மழைகாலத்தில் பயணம் செய்ய முடியாத நிலையில் , கிராம மக்களால் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு  வரப்பட்ட நிலையில் குறித்த வீதியின் புனரமைப்பு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement