தூதரகங்களின் தூதுவர் என்று போலியான வேடம் தரித்து பல கோடி ரூபா மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
உத்தரபிரதேசத்தைச் சேர்நத ஹர்சவர்தன் ஜெயின் என்ற நபர், உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் போலி தூதரகம் நடத்தி வருவதாக உத்தர பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
அதனையடுத்து உத்தர சிறப்பு அதிரடிப் படையினர் குறித்த பகுதியை முற்றுகையிட்ட போதே இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் இவ்வாறு போலி தூதுவராக வேடம் தரித்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத நாடுகளின் தூதுவர் என்று கூறிக்கொண்டு, பலரையும் ஏமாற்றியுள்ளார்.
யாருமே கேள்விப்படாத நாடுகளின் பெயரில் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகப் பலரையும் ஏமாற்றியுள்ளமை தெரியவந்தது.
அத்துடன் அவர் 162 நாடுகளுக்குப் பயணம் செய்ததும், 25 போலி நிறுவனங்களை நடத்தியதும், 300 கோடி ரூபா மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் உத்தர சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தூதரகங்களின் தூதுவராக 300 கோடி ரூபா மோசடி; 10 வருடங்களாக போலி வேடம் தூதரகங்களின் தூதுவர் என்று போலியான வேடம் தரித்து பல கோடி ரூபா மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்தச் சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உத்தரபிரதேசத்தைச் சேர்நத ஹர்சவர்தன் ஜெயின் என்ற நபர், உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் போலி தூதரகம் நடத்தி வருவதாக உத்தர பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. அதனையடுத்து உத்தர சிறப்பு அதிரடிப் படையினர் குறித்த பகுதியை முற்றுகையிட்ட போதே இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் இவ்வாறு போலி தூதுவராக வேடம் தரித்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத நாடுகளின் தூதுவர் என்று கூறிக்கொண்டு, பலரையும் ஏமாற்றியுள்ளார். யாருமே கேள்விப்படாத நாடுகளின் பெயரில் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகப் பலரையும் ஏமாற்றியுள்ளமை தெரியவந்தது. அத்துடன் அவர் 162 நாடுகளுக்குப் பயணம் செய்ததும், 25 போலி நிறுவனங்களை நடத்தியதும், 300 கோடி ரூபா மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.இது தொடர்பான விசாரணைகள் உத்தர சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.