• Jul 28 2025

மாணவர்களிடையே அதிக போதைப்பொருள் பாவனை; தடுப்பதற்கு பாடசாலைகளில் விசேட குழு!

shanuja / Jul 28th 2025, 8:33 am
image

மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிக்கையில், 


பாடசாலை மாணவர்களிடையே தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பது மிக முக்கியமானதொன்றாகும். 


எனவே போதைப்பொருள் பாவனையை மாணவர்களிடையே தடுக்கும் செயற்றிட்டத்தை அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் இணைந்து  முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 


1080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர். 

 

25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில், போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே அதிக போதைப்பொருள் பாவனை; தடுப்பதற்கு பாடசாலைகளில் விசேட குழு மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களிடையே தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பது மிக முக்கியமானதொன்றாகும். எனவே போதைப்பொருள் பாவனையை மாணவர்களிடையே தடுக்கும் செயற்றிட்டத்தை அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் இணைந்து  முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 1080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர்.  25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில், போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement