நல்லூர் பெரும் திருவிழாவுக்கு என இம்முறை எடுத்து வரும் மணலை பேணிப் பாதுகாத்து தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லூர் பெரும் திருவிழாவுக்கு மணலினை எடுத்து வருவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நல்லூர் பெரும் திருவிழாவுக்கான மணல் கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் எமக்கு முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை மருதங்கேணி பிரதேச செயலரிடம் முன்வைத்த போது, பிரதேச செயலர் அங்குள்ள சமூகமட்ட அமைப்பினருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு கோரிக்கையை முன்வைத்த போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இருந்த போதும் நாகர்கோவில் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழகம் அதற்குரிய அனுமதியை வழங்கியபோது, வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்குரிய அனுமதி எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனைத் தொடர்ந்தும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடலை தொடர்ச்சியாக மேற்கொண்ட போதும் எவரும் அதற்குரிய சம்மதத்தை தெரிவிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் அரச காணியிலிருந்து மண்ணை பெற்று விநியோகிப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார்.
அந்த கோரிக்கையானது எம்மால் யாழ்ப்பாணத்தில் உள்ள கனியவளத் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது கொழும்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் சுற்றாடற்துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்குரிய வசதியை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். இது தொடர்பாக சுற்றாடத்துறை அமைச்சருக்கு நான் தெளிவான விளக்கத்தை வழங்கினேன்.
அதனைத் தொடர்ந்து கனியவளத் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற பணிப்பாளர் நாயகத்துடனும் தொலைபேசியில் உரையாடி இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டலை வழங்கியதன் அடிப்படையில் இதற்கான அனுமதியானது கொழும்பு தலைமையகத்தில் இருந்து யாழ்ப்பாணம் கனியவளத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றது.
அதன் அடிப்படையில் நல்லூர் பெருந்திருவிழாவிற்கான மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அங்கு இருக்கின்ற சமூகமட்ட அமைப்புகள் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இருந்த போதிலும் நாங்கள் இம்முறை யாழ்ப்பாணம் மாநகர சபையிடம், இம்முறைக்கு மணல் கிடைக்கப் பெற்றால் அந்த மணலை தொடர்ந்தும் அடுத்த திருவிழாக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம்.- என்றார்.
நல்லூர் - மண் பிரச்சினைக்கு தீர்வு இதுதான் யாழ்.அரச அதிபர் விபரிப்பு நல்லூர் பெரும் திருவிழாவுக்கு என இம்முறை எடுத்து வரும் மணலை பேணிப் பாதுகாத்து தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.நல்லூர் பெரும் திருவிழாவுக்கு மணலினை எடுத்து வருவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நல்லூர் பெரும் திருவிழாவுக்கான மணல் கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் எமக்கு முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை மருதங்கேணி பிரதேச செயலரிடம் முன்வைத்த போது, பிரதேச செயலர் அங்குள்ள சமூகமட்ட அமைப்பினருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு கோரிக்கையை முன்வைத்த போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இருந்த போதும் நாகர்கோவில் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழகம் அதற்குரிய அனுமதியை வழங்கியபோது, வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்குரிய அனுமதி எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.அதனைத் தொடர்ந்தும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடலை தொடர்ச்சியாக மேற்கொண்ட போதும் எவரும் அதற்குரிய சம்மதத்தை தெரிவிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் அரச காணியிலிருந்து மண்ணை பெற்று விநியோகிப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார். அந்த கோரிக்கையானது எம்மால் யாழ்ப்பாணத்தில் உள்ள கனியவளத் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது கொழும்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் சுற்றாடற்துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்குரிய வசதியை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். இது தொடர்பாக சுற்றாடத்துறை அமைச்சருக்கு நான் தெளிவான விளக்கத்தை வழங்கினேன். அதனைத் தொடர்ந்து கனியவளத் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற பணிப்பாளர் நாயகத்துடனும் தொலைபேசியில் உரையாடி இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டலை வழங்கியதன் அடிப்படையில் இதற்கான அனுமதியானது கொழும்பு தலைமையகத்தில் இருந்து யாழ்ப்பாணம் கனியவளத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றது.அதன் அடிப்படையில் நல்லூர் பெருந்திருவிழாவிற்கான மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அங்கு இருக்கின்ற சமூகமட்ட அமைப்புகள் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள். இருந்த போதிலும் நாங்கள் இம்முறை யாழ்ப்பாணம் மாநகர சபையிடம், இம்முறைக்கு மணல் கிடைக்கப் பெற்றால் அந்த மணலை தொடர்ந்தும் அடுத்த திருவிழாக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம்.- என்றார்.