காசாவிற்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விமானம் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பி வைத்துள்ள செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
உணவுக்காக ஏங்கும் காசா மக்களின் நிலை கண்டு, ஐக்கிய அரபு இராச்சியம் இந்த மனிதாபிமான செயலை செய்துள்ளது.
அதற்கமையய காசாவிற்கு 25 தொன் நிறைகொண்ட உணவுப் பொருட்கள் அடங்கிய விமானம் இன்று புறப்பட்டுள்ளது.
பல காலமாக காசா மீது இடம்பெற்று வரும் தாக்குதலில் பாலஸ்தீனியர் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பசி பட்டினியால் குழந்தைகள், பெண்கள் முதல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் காசா மக்களுக்கு உணவு வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் தோல்வியில் முடிந்தது.
எவ்வழியில் காசா மக்களுக்கு உணவு வழங்கலாம் என்று சிந்தித்த தருணம், அண்மையில் எகிப்திலிருந்து போத்தல்களில் உணவுகள் அடைக்கப்பட்டு கடல் வழியாக காசாவிற்கு அனுப்பப்பட்டது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு மக்களை ஈர்த்தது.
அதனையடுத்து இதேபோன்று மக்களை நெருடும் வகையில் மீண்டும் காசாவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடல் வழியை எகிப்து தேர்ந்தெடுத்ததால் ஐக்கிய அரபு வான்வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு விமானம் மூலம் உணவுகள் அடங்கிய பொதிகளை ஐக்கிய அரபு காசா மக்களுக்காக அனுப்பி வைத்துள்ளது.
காசா மக்கள் மீது கரிசனை கொண்டு மனிதநேயத்தோடு தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வானில் பறந்த உணவுகள்; காசா மக்களுக்கு ஐக்கிய அரபு கொடுத்த நெகிழ்சியான அன்பு பரிசு காசாவிற்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விமானம் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பி வைத்துள்ள செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. உணவுக்காக ஏங்கும் காசா மக்களின் நிலை கண்டு, ஐக்கிய அரபு இராச்சியம் இந்த மனிதாபிமான செயலை செய்துள்ளது. அதற்கமையய காசாவிற்கு 25 தொன் நிறைகொண்ட உணவுப் பொருட்கள் அடங்கிய விமானம் இன்று புறப்பட்டுள்ளது. பல காலமாக காசா மீது இடம்பெற்று வரும் தாக்குதலில் பாலஸ்தீனியர் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பசி பட்டினியால் குழந்தைகள், பெண்கள் முதல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் காசா மக்களுக்கு உணவு வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் தோல்வியில் முடிந்தது. எவ்வழியில் காசா மக்களுக்கு உணவு வழங்கலாம் என்று சிந்தித்த தருணம், அண்மையில் எகிப்திலிருந்து போத்தல்களில் உணவுகள் அடைக்கப்பட்டு கடல் வழியாக காசாவிற்கு அனுப்பப்பட்டது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு மக்களை ஈர்த்தது. அதனையடுத்து இதேபோன்று மக்களை நெருடும் வகையில் மீண்டும் காசாவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடல் வழியை எகிப்து தேர்ந்தெடுத்ததால் ஐக்கிய அரபு வான்வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு விமானம் மூலம் உணவுகள் அடங்கிய பொதிகளை ஐக்கிய அரபு காசா மக்களுக்காக அனுப்பி வைத்துள்ளது. காசா மக்கள் மீது கரிசனை கொண்டு மனிதநேயத்தோடு தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.