ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் "சிவமயம் 2025" நிகழ்வு, எதிர்வரும் 29.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நிருத்திய சங்கீத கலைக்கூடம் (ஐக்கிய இராச்சியம்) இல் இருந்து வருகைதரும் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய சிவமயம் 2025" நிகழ்வானது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறவுள்ளது
லண்டன் நிருத்திய சங்கீத கலைக்கூட நிறுவுனர் ஸ்ரீமதி ராதிகா ராலோகநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிலையில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு இ.நிசாந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிவமயம் 2025 நிகழ்வில் நிருத்திய சங்கீத கலைக்கூட மாணவர்களின் கர்நாடக இசைக் கோர்வையும் அதனைத் தொடர்ந்து நிருத்திய சங்கீத கலைக்கூட மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் கலை ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் "சிவமயம் 2025" நிகழ்வு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் "சிவமயம் 2025" நிகழ்வு, எதிர்வரும் 29.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. நிருத்திய சங்கீத கலைக்கூடம் (ஐக்கிய இராச்சியம்) இல் இருந்து வருகைதரும் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய சிவமயம் 2025" நிகழ்வானது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறவுள்ளதுலண்டன் நிருத்திய சங்கீத கலைக்கூட நிறுவுனர் ஸ்ரீமதி ராதிகா ராலோகநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிலையில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு இ.நிசாந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். சிவமயம் 2025 நிகழ்வில் நிருத்திய சங்கீத கலைக்கூட மாணவர்களின் கர்நாடக இசைக் கோர்வையும் அதனைத் தொடர்ந்து நிருத்திய சங்கீத கலைக்கூட மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் கலை ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் அழைப்பு விடுத்துள்ளனர்.