யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இப்போது இருக்கின்றார் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் கதைக்கும்போது வெள்ளைப் பத்திரிகை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
1981இல் ரணில் விக்ரமசிங்கவால் கொண்டுவரப்பட்ட வெள்ளைப் பத்திரிகையின் நோக்கம் முழுமையாக கருமையானது.
அந்த வெள்ளைப் பத்திரிகை மூலம் கறுப்பு வேலைத்திட்டங்களை கொண்டு வந்த ரணில் போன்றோரே யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைத்தனர். கறுப்பு ஜூலையையும் ஏற்படுத்தினர்.
இப்போது அரகலய வழக்கிலும் ரணில் தோல்வியடைந்துள்ளார்.
கறுப்பு ஜூலையை உருவாக்கிய அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களில் தற்போதுள்ள ஒருவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும் என்றார்.
ரணில் போன்றோரே யாழ். நூலகத்திற்கு தீ வைத்து, கறுப்பு ஜூலையையும் ஏற்படுத்தினர் பிமல் குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இப்போது இருக்கின்றார் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் கதைக்கும்போது வெள்ளைப் பத்திரிகை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.1981இல் ரணில் விக்ரமசிங்கவால் கொண்டுவரப்பட்ட வெள்ளைப் பத்திரிகையின் நோக்கம் முழுமையாக கருமையானது. அந்த வெள்ளைப் பத்திரிகை மூலம் கறுப்பு வேலைத்திட்டங்களை கொண்டு வந்த ரணில் போன்றோரே யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைத்தனர். கறுப்பு ஜூலையையும் ஏற்படுத்தினர். இப்போது அரகலய வழக்கிலும் ரணில் தோல்வியடைந்துள்ளார். கறுப்பு ஜூலையை உருவாக்கிய அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களில் தற்போதுள்ள ஒருவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும் என்றார்.