• Jul 26 2025

குளிர்சாதனப்பெட்டியை திறந்து ஐஸ்கிரீமை ருசித்து குடித்த கரடி - இணையத்தில் வைரலாகும் காணொளி!

shanuja / Jul 24th 2025, 5:09 pm
image

கரடியொன்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஜஸ்கீரிமை குடித்த காட்சி காணொளியாக வெளிவந்து இணையத்தில் வைராகி வருகின்றது. 


தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த பேரார் பகுதியில் நேற்று இந்த நெகிழ்ச்சிக் காணொளி பதிவாகியுள்ளது. 


நேற்று (23) நள்ளிரவு வீதியால் சென்றுகொண்டிருந்த கரடியொன்று குறித்த பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றிற்கு சென்றுள்ளது. 


விடுதிக்குள் நுழைவதற்கு வாசலில் இருந்த கண்ணாடிக் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளது. விடுதிக்குள் அங்குமிங்குமாக அவதானித்த கரடி, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டி அருகே சென்றது. 


பின்னர் அந்தக் குளிர்சாதனப் பெட்டியை மிகவும் இலகுவான முறையில் திறந்து ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்து குடித்துள்ளது. 


கரடி ஜஸ்கரீம் குடிக்கும் காட்சி விடுதிக்குள் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி இணையத்தில் வெளிவந்து வைரலாகி உள்ளது. 



அந்தக் காணொளியில் கரடி ஐஸ்கிரீமை மிகவும் ருசித்து ருசித்து குடிப்பதை குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குளிர்சாதனப்பெட்டியை திறந்து ஐஸ்கிரீமை ருசித்து குடித்த கரடி - இணையத்தில் வைரலாகும் காணொளி கரடியொன்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஜஸ்கீரிமை குடித்த காட்சி காணொளியாக வெளிவந்து இணையத்தில் வைராகி வருகின்றது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த பேரார் பகுதியில் நேற்று இந்த நெகிழ்ச்சிக் காணொளி பதிவாகியுள்ளது. நேற்று (23) நள்ளிரவு வீதியால் சென்றுகொண்டிருந்த கரடியொன்று குறித்த பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றிற்கு சென்றுள்ளது. விடுதிக்குள் நுழைவதற்கு வாசலில் இருந்த கண்ணாடிக் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளது. விடுதிக்குள் அங்குமிங்குமாக அவதானித்த கரடி, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டி அருகே சென்றது. பின்னர் அந்தக் குளிர்சாதனப் பெட்டியை மிகவும் இலகுவான முறையில் திறந்து ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்து குடித்துள்ளது. கரடி ஜஸ்கரீம் குடிக்கும் காட்சி விடுதிக்குள் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி இணையத்தில் வெளிவந்து வைரலாகி உள்ளது. அந்தக் காணொளியில் கரடி ஐஸ்கிரீமை மிகவும் ருசித்து ருசித்து குடிப்பதை குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement