• Jul 25 2025

மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை கடித்த முதலை; அச்சத்தில் கந்தளாய் மக்கள்

Chithra / Jul 24th 2025, 3:15 pm
image


திருகோணமலை -கந்தளாய் பகுதியில் உள்ள ஜனரஜ்ஜன குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரொருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

முதலைக்கடிக்குள்ளான மீனவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்  47 வயதுடைய   மூதூர் -ஆசாத் நகரைச் சேர்ந்த எஜ்.டி.மர்சூக் என்பவரே காயமடைந்துள்ளார். 

குறித்த நபர் வழமையாக இக்குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர் என்பதோடு சம்பவ தினமும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் ஜனரஜ்ஜன குளத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 


மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை கடித்த முதலை; அச்சத்தில் கந்தளாய் மக்கள் திருகோணமலை -கந்தளாய் பகுதியில் உள்ள ஜனரஜ்ஜன குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரொருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.முதலைக்கடிக்குள்ளான மீனவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்  47 வயதுடைய   மூதூர் -ஆசாத் நகரைச் சேர்ந்த எஜ்.டி.மர்சூக் என்பவரே காயமடைந்துள்ளார். குறித்த நபர் வழமையாக இக்குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர் என்பதோடு சம்பவ தினமும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கந்தளாய் ஜனரஜ்ஜன குளத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement