• Jul 26 2025

கொங்கிரீட் தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி - ஏறாவூரில் சம்பவம்!

shanuja / Jul 24th 2025, 5:15 pm
image

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வீதியிலிருந்த கொங்கிரீட் தூணுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


இந்த விபத்து மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்,  வேகக் கட்டுப்பாட்டை இழந்து - வீதியோரத்தில் இருந்த கொங்கிரிட் தூணில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்புக்குச் சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும்  ஏறாவூர் திரும்பிய வேளையே விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார். 


உயிரிழந்த இளைஞனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , உடற்கூற்றப் பரிசோதனைக்கா சடலம்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொங்கிரீட் தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி - ஏறாவூரில் சம்பவம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வீதியிலிருந்த கொங்கிரீட் தூணுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்,  வேகக் கட்டுப்பாட்டை இழந்து - வீதியோரத்தில் இருந்த கொங்கிரிட் தூணில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்புக்குச் சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும்  ஏறாவூர் திரும்பிய வேளையே விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , உடற்கூற்றப் பரிசோதனைக்கா சடலம்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement