• Jul 26 2025

திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளை கொன்ற தாய்! 7 வருடங்களின் பின் வந்த தீர்ப்பு நீதிமன்றில் கதறிய குற்றவாளிகள்!

shanuja / Jul 24th 2025, 5:18 pm
image

குன்றத்தூர் பகுதியில்  திருமணத்திற்கு மீறிய உறவிற்கு இடைஞ்சலாக இருந்த தனது குழந்தைகளைக் கொன்ற தாய் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் அவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.


விஜய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மனைவி அபிராமி ரிக்ரொக் பிரபலமாவார். ரிக்ரொக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வந்த அபிராமி அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன்  திருமணத்திற்கு மீறிய உறவில்  வயப்பட்டுள்ளார்.   


அபிராமியின் திருமணத்திற்கு மீறிய உறவு விவகாரம் கணவரான விஜய்க்கு தெரிய வர  இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி கணவரை விட்டு விட்டு திருமணத்திற்கு மீறிய உறவினரான சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளார். 


இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்த அபிராமி கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். 


இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவர் பொலிஸ்  நிலையத்தில்  இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தார். அபிராமியை வலைவீசிய பொலிஸார்,   சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற போது  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 


இந்த  வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கிற்கு அழைத்து வரப்பட்ட அபிராமி மற்றும் சுந்தரம் முகத்தை மூடியவாறு நீதிமன்றத்திற்கு வந்தனர். 


வழக்கின் இறுதியில் கொலைக்குற்றவாளி அபிராமிக்கும் அவரது திருமணத்திற்கு மீறிய உறவினரான சுந்தரத்திற்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 


நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேட்ட பின்னர், குறித்த இருவரும் நீதிமன்ற வாசலில் முகத்தை மூடி கதறி அழுத காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளை கொன்ற தாய் 7 வருடங்களின் பின் வந்த தீர்ப்பு நீதிமன்றில் கதறிய குற்றவாளிகள் குன்றத்தூர் பகுதியில்  திருமணத்திற்கு மீறிய உறவிற்கு இடைஞ்சலாக இருந்த தனது குழந்தைகளைக் கொன்ற தாய் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் அவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.விஜய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மனைவி அபிராமி ரிக்ரொக் பிரபலமாவார். ரிக்ரொக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வந்த அபிராமி அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன்  திருமணத்திற்கு மீறிய உறவில்  வயப்பட்டுள்ளார்.   அபிராமியின் திருமணத்திற்கு மீறிய உறவு விவகாரம் கணவரான விஜய்க்கு தெரிய வர  இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி கணவரை விட்டு விட்டு திருமணத்திற்கு மீறிய உறவினரான சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளார். இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்த அபிராமி கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவர் பொலிஸ்  நிலையத்தில்  இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தார். அபிராமியை வலைவீசிய பொலிஸார்,   சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற போது  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த  வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கிற்கு அழைத்து வரப்பட்ட அபிராமி மற்றும் சுந்தரம் முகத்தை மூடியவாறு நீதிமன்றத்திற்கு வந்தனர். வழக்கின் இறுதியில் கொலைக்குற்றவாளி அபிராமிக்கும் அவரது திருமணத்திற்கு மீறிய உறவினரான சுந்தரத்திற்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேட்ட பின்னர், குறித்த இருவரும் நீதிமன்ற வாசலில் முகத்தை மூடி கதறி அழுத காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement