• Jul 14 2025

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!

Chithra / Jul 13th 2025, 12:09 pm
image

  

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்டவிதிகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 5 சாரதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்,

சந்தேக நபர்கள் நாளை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வு மேற்கொண்டமைக்காகவே இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேருநுவர பொலிஸார், கந்தளாய் விசேட அதிரடிப்படையிர் இணைந்து இவ் சுற்றிவளைப்பை மேற்கொண்டு உழவு இயந்திரங்களையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது   திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்டவிதிகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது 5 சாரதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்,சந்தேக நபர்கள் நாளை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வு மேற்கொண்டமைக்காகவே இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சேருநுவர பொலிஸார், கந்தளாய் விசேட அதிரடிப்படையிர் இணைந்து இவ் சுற்றிவளைப்பை மேற்கொண்டு உழவு இயந்திரங்களையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement