• Jul 10 2025

பொத்துவில் அறுகம்பேயில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

shanuja / Jul 9th 2025, 9:07 am
image

அம்பாறை - பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   


பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை  நோக்கிச் செல்லும் போது ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார்,கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு    பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. 


இதன்  காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சந்திகள், இதர வர்த்தக நிலையங்களில்  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இது தவிர குறித்த பகுதியூடாக  சந்தேகத்திற்கிடமாக  பயணித்தவர்களிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டன. அத்துடன் இடையிடையே  விசேட அதிரப்படையினரின் ரோந்து சேவையும் இடம்பெற்றது.


மேலும்   வீடுகள் கட்டடங்களில் பாதுகாப்பு தரப்பினர்  கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன் வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அண்மைக்காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பொத்துவில் பகுதிக்கு அதிகளவான உல்லாசப்பிரயாணிகள் வருகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இவ்வாறு  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  


அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு (surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும்  அவர்களுக்கு எதுவித  ஆபத்து நேரிடாமல் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் அறுகம்பேயில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு அம்பாறை - பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை  நோக்கிச் செல்லும் போது ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார்,கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு    பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. இதன்  காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சந்திகள், இதர வர்த்தக நிலையங்களில்  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர குறித்த பகுதியூடாக  சந்தேகத்திற்கிடமாக  பயணித்தவர்களிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டன. அத்துடன் இடையிடையே  விசேட அதிரப்படையினரின் ரோந்து சேவையும் இடம்பெற்றது.மேலும்   வீடுகள் கட்டடங்களில் பாதுகாப்பு தரப்பினர்  கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன் வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அண்மைக்காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பொத்துவில் பகுதிக்கு அதிகளவான உல்லாசப்பிரயாணிகள் வருகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இவ்வாறு  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு (surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும்  அவர்களுக்கு எதுவித  ஆபத்து நேரிடாமல் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement