• May 23 2025

யாழில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் மீட்பு...!

Sharmi / May 4th 2024, 3:24 pm
image

யாழில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் பெருமளவான வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு ஒரு லட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் தலைமையில் பல வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடுகள், சுட்டுதுண்டுகள் இல்லாத வெளிநாட்டு பிஸ்கட் மற்றும் சொக்கலேற் வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பொருட்கள் தொடர்பில் இறக்குமதியாளர்களிற்கும் விநியோகஸ்தர்களிற்கும்  எதிராக  நேற்றுமுன்தினம்(02) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரித்த நீதவான், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் ஒருலட்சம் ரூபா தண்டமாக அறவிடுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் மீட்பு. யாழில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் பெருமளவான வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு ஒரு லட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது.ஆனைக்கோட்டைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் தலைமையில் பல வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடுகள், சுட்டுதுண்டுகள் இல்லாத வெளிநாட்டு பிஸ்கட் மற்றும் சொக்கலேற் வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த பொருட்கள் தொடர்பில் இறக்குமதியாளர்களிற்கும் விநியோகஸ்தர்களிற்கும்  எதிராக  நேற்றுமுன்தினம்(02) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.குறித்த வழக்கினை விசாரித்த நீதவான், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் ஒருலட்சம் ரூபா தண்டமாக அறவிடுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now