இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.
இந்த பரிந்துரை அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு காத்திருப்பதாக தெரியவருகின்றது.
அதன்படி, நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
தற்போதைய பிரதம நீதியரசர் நீதிபதி முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ எதிர்வரும் ஜூலை 27 அன்று ஓய்வு பெறவுள்ளார்.
ஜூலை 25 அன்று உயர் நீதிமன்றத்தில் முறையான பிரியாவிடை நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் நாட்டின் 49 வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட உள்ளார்.
பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க பரிந்துரை இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.இந்த பரிந்துரை அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு காத்திருப்பதாக தெரியவருகின்றது. அதன்படி, நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.தற்போதைய பிரதம நீதியரசர் நீதிபதி முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ எதிர்வரும் ஜூலை 27 அன்று ஓய்வு பெறவுள்ளார்.ஜூலை 25 அன்று உயர் நீதிமன்றத்தில் முறையான பிரியாவிடை நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் நாட்டின் 49 வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட உள்ளார்.