உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளதாகத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அதேபோன்று தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குரிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் இல்லத்தில் இன்று காலை குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பையடுத்தே தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
பல உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் - சித்தார்த்தன் கருத்து உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளதாகத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அதேபோன்று தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குரிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதாக சித்தார்த்தன் குறிப்பிட்டார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் இல்லத்தில் இன்று காலை குறித்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பையடுத்தே தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.