• Aug 11 2025

மட்டக்களப்பில் றொட்டறிக் கழகத்தின் புதிய கிளை ஸ்தாபிப்பு!

shanuja / Aug 11th 2025, 3:58 pm
image

றொட்டறிக் கழகத்தின் புதிய கிளை ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியை மையப்படுத்தியதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(10)  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


இதன்போது புதிதாக அமைக்கப்பட்ட றொட்டறிக் கழகத்தின் பட்டிருப்புத் தொகுதிக்காக கிளையின் தலைவராக சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் பாமதி ஞானப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டார். 


இதில் றொட்டறிக் கழகத்தின் மாவட்ட ஆளுனர் டெல்வின் பேரேரா, புதிய கலைவருக்கு பதக்கம் அணிவித்து, சின்னம் சூட்டி சான்றிழையும் வழங்கி வைத்தார்.


மேலும் கழகத்தின் புதிய கிளையில் அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களுக்கு இதன்போது சின்னம் சூட்டப்பட்டு கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 


பட்டிருப்புத் தொகுதியை மையப்படுத்தியதாக எதிர்காலத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உள்ளிட்ட பல சமூக சேவைளை மேற்கொள்ளவுள்ளதாக றொட்டறிக் கழகத்தின் மாவட்ட ஆளுநர் டெல்வின் பேரேரா தெரிவித்தார்.



பெரிபோரதீவில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் றொட்டறிக் கழகத்தின் மாவட்ட ஆளுனர் (இலங்கை மற்றும் மாலைதீவு)  டெல்வின் பேரேரா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், றொட்டறிக் கழகத்தின் முன்னாள் ஆளுனர்களான பி.டி.ஆர்.ரஞ்சன், சம்பத் குமார், தினேஸ் குமார், ஆளுனரின் விசேட பிரதிநிதி மகேந்தரன் ஜெகவண்ணன், உதவி ஆளுனர் கே.முரளிதரன், மற்றும் றொட்டறிக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் றொட்டறிக் கழகத்தின் புதிய கிளை ஸ்தாபிப்பு றொட்டறிக் கழகத்தின் புதிய கிளை ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியை மையப்படுத்தியதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(10)  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இதன்போது புதிதாக அமைக்கப்பட்ட றொட்டறிக் கழகத்தின் பட்டிருப்புத் தொகுதிக்காக கிளையின் தலைவராக சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் பாமதி ஞானப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டார். இதில் றொட்டறிக் கழகத்தின் மாவட்ட ஆளுனர் டெல்வின் பேரேரா, புதிய கலைவருக்கு பதக்கம் அணிவித்து, சின்னம் சூட்டி சான்றிழையும் வழங்கி வைத்தார்.மேலும் கழகத்தின் புதிய கிளையில் அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களுக்கு இதன்போது சின்னம் சூட்டப்பட்டு கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பட்டிருப்புத் தொகுதியை மையப்படுத்தியதாக எதிர்காலத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உள்ளிட்ட பல சமூக சேவைளை மேற்கொள்ளவுள்ளதாக றொட்டறிக் கழகத்தின் மாவட்ட ஆளுநர் டெல்வின் பேரேரா தெரிவித்தார்.பெரிபோரதீவில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் றொட்டறிக் கழகத்தின் மாவட்ட ஆளுனர் (இலங்கை மற்றும் மாலைதீவு)  டெல்வின் பேரேரா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், றொட்டறிக் கழகத்தின் முன்னாள் ஆளுனர்களான பி.டி.ஆர்.ரஞ்சன், சம்பத் குமார், தினேஸ் குமார், ஆளுனரின் விசேட பிரதிநிதி மகேந்தரன் ஜெகவண்ணன், உதவி ஆளுனர் கே.முரளிதரன், மற்றும் றொட்டறிக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement