• Aug 24 2025

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரணில்!

shanuja / Aug 23rd 2025, 6:16 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.


கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  


கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை உறுதிப்படுத்தினார்.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 


நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் பிணை கோரப்பட்டது. எனினும் அவருக்குப் பிணை வழங்கப்படாது நேற்றைய தினமே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 


பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரணில், சுகயீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை உறுதிப்படுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் பிணை கோரப்பட்டது. எனினும் அவருக்குப் பிணை வழங்கப்படாது நேற்றைய தினமே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரணில், சுகயீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement