வீதியில் பயணித்த இளைஞனை பேருந்து ஒன்று மோதித் தள்ளியதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மொனராகலை - பொத்துவில் வீதியில் நேற்று வியாழக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று வீதியில் பயணித்த இளைஞன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மொனராகலை , எத்திமலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் பயணித்த இளைஞனை மோதித் தள்ளிய பேருந்து; சிகிச்சை பலனின்றி இளைஞன் பலி வீதியில் பயணித்த இளைஞனை பேருந்து ஒன்று மோதித் தள்ளியதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மொனராகலை - பொத்துவில் வீதியில் நேற்று வியாழக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொத்துவில் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று வீதியில் பயணித்த இளைஞன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் மொனராகலை , எத்திமலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் எனத் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.