• Aug 22 2025

நானாட்டான் டிலாசால் கல்லூரியின் ஆண்டு நிறைவையொட்டி மருத்துவ முகாம்!

shanuja / Aug 22nd 2025, 4:43 pm
image

மன்னார் டிலாசால் கல்லூரி நானாட்டான் 125 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  (22).காலை 8:30 மணிக்கு சிறப்பு மருத்துவ முகாம்  கல்லூரி பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது . 


பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில்  குறித்த   மருத்துவ முகாம் இடம் பெற்றது.


இந்த சிறப்பு மருத்துவ முகாம்  இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 125 வது ஆண்டு நிறைவில் தற்போது கால் பதித்துள்ள நிலையில் இடம் பெற்றதோடு,  அதையொட்டி   இதற்கு முன்னரும் பல சிறப்பு நிகழ்வுகள்  இடம் பெற்றுள்ளன. 


இந்த ஜூபிலி ஆண்டின் சிறப்பு நிகழ்வாக இப்பிரதேச மக்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் இடம்பெற்றது .


 குறித்த மருத்துவ முகாமில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் பங்கு கொண்டு தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்திருந்தனர் .


இந்த மருத்துவ முகாமினை டி லா சால் கல்லூரி சமூகம் அவர்களுடன் இணைந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

நானாட்டான் டிலாசால் கல்லூரியின் ஆண்டு நிறைவையொட்டி மருத்துவ முகாம் மன்னார் டிலாசால் கல்லூரி நானாட்டான் 125 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  (22).காலை 8:30 மணிக்கு சிறப்பு மருத்துவ முகாம்  கல்லூரி பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது . பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில்  குறித்த   மருத்துவ முகாம் இடம் பெற்றது.இந்த சிறப்பு மருத்துவ முகாம்  இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 125 வது ஆண்டு நிறைவில் தற்போது கால் பதித்துள்ள நிலையில் இடம் பெற்றதோடு,  அதையொட்டி   இதற்கு முன்னரும் பல சிறப்பு நிகழ்வுகள்  இடம் பெற்றுள்ளன. இந்த ஜூபிலி ஆண்டின் சிறப்பு நிகழ்வாக இப்பிரதேச மக்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் இடம்பெற்றது . குறித்த மருத்துவ முகாமில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் பங்கு கொண்டு தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்திருந்தனர் .இந்த மருத்துவ முகாமினை டி லா சால் கல்லூரி சமூகம் அவர்களுடன் இணைந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement