விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் பின்ணணியில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்ரமசிங்கவின்
ஆதரவாளர்களும் கூடியுள்ளதால் இவ்வாறு பதற்றமான சூழல் ஏற்பட்ஏற்பட்டது.
இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு கலகமடக்கும் படையினர் அழைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இதன் பின்ணணியில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டது.நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியுள்ளதால் இவ்வாறு பதற்றமான சூழல் ஏற்பட்ஏற்பட்டது.இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு கலகமடக்கும் படையினர் அழைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.