• Aug 22 2025

தொலைந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு; இளைஞனின் மனிதாபிமானத்தை பாராட்டிய பொலிஸார்

Chithra / Aug 22nd 2025, 4:42 pm
image


வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்   கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று  இடம்பெற்றதுடன் தொலைந்த   பணப்பை  மீட்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில்    உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

அரபு  நாடு ஒன்றில்  இருந்து தொழில் நிமிர்த்தம்   விடுமுறையில் நாடு திரும்பிய   நாவிதன்வெளி பகுதியை சேர்ந்த   இளைஞன்   கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைக்கு சென்ற நிலையில்  பணப்பை ஒன்றினை வீதியில்  கண்டெடுத்துள்ளார். 

பின்னர் குறித்த இளைஞன் வீதியில் இருந்து கண்டெடுத்த   பணப்பையை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்று ஆராய்ந்து அப்பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு  தன்னிடம் பணப்பை இருப்பதாகவும்,

அதனை  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ள வருமாறும் கூறியுள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த  பணப்பையை கண்டெடுத்த   அவ்விளைஞன் பொலிஸாரை சந்தித்து பணப்பையை தவறவிட்ட     உரிய நபரிடம் பணப்பையை  ஒப்படைப்பதற்கு உரிய  நடவடிக்கை எடுக்குமாறு  பொலிஸாரை  கோரியுள்ளார். 

இந்நிலையில்  தவறவிடப்பட்ட பணப்பையை   மீண்டும் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்திற்கு வந்து  பெற்றுக் கொண்டவர், மருதமுனை பகுதியை சேர்ந்த   அன்றாடம் இடியப்ப விற்பனையில் ஈடுபடும் நபராவார். 

மிக சிரமத்துடன் வாழ்வாதாரத்தை நடத்தி செல்வதாக குறிப்பிட்ட அவர்  பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில்  வசிப்பதுடன்  தனது பணப்பையானது கல்முனை சந்தைக்கு பொருள்  கொள்வனவிற்காக சென்ற போது    தவறவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

தொலைந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு; இளைஞனின் மனிதாபிமானத்தை பாராட்டிய பொலிஸார் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்   கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று  இடம்பெற்றதுடன் தொலைந்த   பணப்பை  மீட்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில்    உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவதுஅரபு  நாடு ஒன்றில்  இருந்து தொழில் நிமிர்த்தம்   விடுமுறையில் நாடு திரும்பிய   நாவிதன்வெளி பகுதியை சேர்ந்த   இளைஞன்   கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைக்கு சென்ற நிலையில்  பணப்பை ஒன்றினை வீதியில்  கண்டெடுத்துள்ளார். பின்னர் குறித்த இளைஞன் வீதியில் இருந்து கண்டெடுத்த   பணப்பையை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்று ஆராய்ந்து அப்பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு  தன்னிடம் பணப்பை இருப்பதாகவும்,அதனை  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ள வருமாறும் கூறியுள்ளார்.அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த  பணப்பையை கண்டெடுத்த   அவ்விளைஞன் பொலிஸாரை சந்தித்து பணப்பையை தவறவிட்ட     உரிய நபரிடம் பணப்பையை  ஒப்படைப்பதற்கு உரிய  நடவடிக்கை எடுக்குமாறு  பொலிஸாரை  கோரியுள்ளார். இந்நிலையில்  தவறவிடப்பட்ட பணப்பையை   மீண்டும் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்திற்கு வந்து  பெற்றுக் கொண்டவர், மருதமுனை பகுதியை சேர்ந்த   அன்றாடம் இடியப்ப விற்பனையில் ஈடுபடும் நபராவார். மிக சிரமத்துடன் வாழ்வாதாரத்தை நடத்தி செல்வதாக குறிப்பிட்ட அவர்  பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில்  வசிப்பதுடன்  தனது பணப்பையானது கல்முனை சந்தைக்கு பொருள்  கொள்வனவிற்காக சென்ற போது    தவறவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement