• Aug 23 2025

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல்!

shanuja / Aug 22nd 2025, 10:21 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


குற்றப் புலனாய்வுத் துறையால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 


இன்று நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையான ரணிலை 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். 


அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார். 


அதன்பின்னர் கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 


நீதிமன்றில் ரணில் சார்பில்  சட்டத்தரணி ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றில் முன்னிலையானார். 


அதன்போது ரணிலின் 2023 லண்டன் பயணத்திற்காக 10 பேருக்கு 16.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும்  முதலில் அதை "தனிப்பட்ட பயணம்" என்று குறிப்பிட்ட ஆவணங்கள் பின்னர் மாற்றப்பட்டதாகவும் ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


எனினும் விசாரணைகளின் பின்னர் ரணிலை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இன்று நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையான ரணிலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றில் ரணில் சார்பில்  சட்டத்தரணி ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றில் முன்னிலையானார். அதன்போது ரணிலின் 2023 லண்டன் பயணத்திற்காக 10 பேருக்கு 16.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும்  முதலில் அதை "தனிப்பட்ட பயணம்" என்று குறிப்பிட்ட ஆவணங்கள் பின்னர் மாற்றப்பட்டதாகவும் ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.எனினும் விசாரணைகளின் பின்னர் ரணிலை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement