வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை பயனாளிகளுக்கு கையளிக்கும் முதற்கட்ட நிகழ்வு நேற்று (21) மன்றத்தின் தலைவரும் மனிதாபிமான செயற்பாட்டாளருமான எம். ரீ. எம். பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
கடந்தகால போர்ச்சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற, அடிப்படை தங்குமிட வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் இந்த நடப்பாண்டில் 40 நிரந்தர வீடுகள் சிலி நாட்டை தலைமையமாகக் கொண்ட சர்வதேச தொண்டு நிறுவனமான செலவிப் பவுண்டேன் (SELAVIP Foundation) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நிரந்தரவீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.
இவற்றில் முதற்கட்டமாக ஐந்து வீடுகள் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
திருகோணமலை மக்கள் சேவை மன்றம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளமுடியாத குடும்பங்களுக்கு வீடுகள், மலசலகூடங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.
மக்கள் சேவை மன்றத்தினால் இது வரை 300 நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீடுகள் பல்வேறு நிதி அனுசரணையாளர்கள் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் மக்கள் சேவை மன்றத்தின் மூத்த ஆலோசகர் பிரகலநாதன், மன்றத்தின் திட்ட உத்தியோகத்தர் குவைசிர், நிதி நிர்வாக உத்தியோகத்தர் கிரிஸ்ணவேணி, நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள், பயனாளிகளின் குடும்பங்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் பயனாளிகளுக்கு வீடுகள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை பயனாளிகளுக்கு கையளிக்கும் முதற்கட்ட நிகழ்வு நேற்று (21) மன்றத்தின் தலைவரும் மனிதாபிமான செயற்பாட்டாளருமான எம். ரீ. எம். பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது. கடந்தகால போர்ச்சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற, அடிப்படை தங்குமிட வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் இந்த நடப்பாண்டில் 40 நிரந்தர வீடுகள் சிலி நாட்டை தலைமையமாகக் கொண்ட சர்வதேச தொண்டு நிறுவனமான செலவிப் பவுண்டேன் (SELAVIP Foundation) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நிரந்தரவீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.இவற்றில் முதற்கட்டமாக ஐந்து வீடுகள் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. திருகோணமலை மக்கள் சேவை மன்றம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளமுடியாத குடும்பங்களுக்கு வீடுகள், மலசலகூடங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் சேவை மன்றத்தினால் இது வரை 300 நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீடுகள் பல்வேறு நிதி அனுசரணையாளர்கள் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் மக்கள் சேவை மன்றத்தின் மூத்த ஆலோசகர் பிரகலநாதன், மன்றத்தின் திட்ட உத்தியோகத்தர் குவைசிர், நிதி நிர்வாக உத்தியோகத்தர் கிரிஸ்ணவேணி, நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள், பயனாளிகளின் குடும்பங்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.