• Aug 23 2025

காலில் ஏற்பட்ட வீக்கம் இளம் தாய் உயிரிழப்பு; யாழ்.போதனா மருத்துவமனையில் துயரம்!

shanuja / Aug 22nd 2025, 9:37 pm
image

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் 

பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (21) உயிரிழந்துள்ளார்.


பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த கௌதமன் தமிழ்நிலா (வயது 24) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வலது காலில் வீக்கம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார். 


பின்னர் மீண்டும் காலில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 


உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

காலில் ஏற்பட்ட வீக்கம் இளம் தாய் உயிரிழப்பு; யாழ்.போதனா மருத்துவமனையில் துயரம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (21) உயிரிழந்துள்ளார்.பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த கௌதமன் தமிழ்நிலா (வயது 24) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வலது காலில் வீக்கம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காலில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement