சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இதுவரையிர் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ருவிற்றர்), யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு கடந்த 4 ஆம் திகதி நேபாள அரசாங்கம் தடை விதித்தது
சமூக ஊடக தளங்களை தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட அதன் நகரங்களில் இளைஞர்கள் இணைந்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, அவர்களைத் தடுக்க பொலிஸார் தடுப்புக்களை அமைத்தனர்.
தடுப்புக்களையும் மீறி போராட்டக்காரர்கள் செல்ல முற்பட போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது.
போராட்டக்களம் கலவரமாக மாற போராட்டக்காரர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வேளையில் போராட்டக்களத்தில் இருந்த 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேபாள பிரதமரின் இல்லம், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், பாராளுமன்ற கட்டடம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா சீனா அல்லது தாய்லாந்துக்குச் செல்லத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதிலும், மக்கள் அதை மீறி தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்றம் மற்றும் பிற இடங்களில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் தொடரும் போராட்டம் உயிரிழப்பு 19ஆக அதிகரிப்பு; பிரதமரின் இல்லத்திற்கும் தீ வைப்பு- நாட்டை விட்டு ஓடுவாரா பிரதமர் சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இதுவரையிர் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ருவிற்றர்), யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு கடந்த 4 ஆம் திகதி நேபாள அரசாங்கம் தடை விதித்தது சமூக ஊடக தளங்களை தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட அதன் நகரங்களில் இளைஞர்கள் இணைந்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, அவர்களைத் தடுக்க பொலிஸார் தடுப்புக்களை அமைத்தனர். தடுப்புக்களையும் மீறி போராட்டக்காரர்கள் செல்ல முற்பட போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்களம் கலவரமாக மாற போராட்டக்காரர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வேளையில் போராட்டக்களத்தில் இருந்த 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் நேபாள பிரதமரின் இல்லம், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், பாராளுமன்ற கட்டடம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர்.நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா சீனா அல்லது தாய்லாந்துக்குச் செல்லத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதிலும், மக்கள் அதை மீறி தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்றம் மற்றும் பிற இடங்களில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.