• Sep 06 2025

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேவையை வழங்கக்கோரி போராட்டம்

Chithra / Sep 5th 2025, 4:31 pm
image

 


சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கக்கோரி இன்று  வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன்போது “வைத்தியசாலையில் சிறந்த சேவையை உறுதிப்படுத்துங்கள்” “திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது” “எலும்பு முறிவுக்காக தனியான களம் வேண்டும்” “நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யுரூநு கட்டடம் திறக்கப்பட வேண்டும்” “வைத்தியர்களுக்கு விடுதி வேண்டும்” “சிற்றூழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுங்கள்” “பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள்” நிலத்தில் காட்போட் அட்டையில் படுக்கும் நிலை வேண்டாம்” போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படடிருந்தது.

குறித்த மகஜரில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் தரமானது குறித்த வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப இல்லை எனவும் இதனாலேயே பல சிரமங்களுக்கு நோயாளிகள் முகம் கொடுத்து வருவதாகவும் எனவே வைத்திசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தரமான சேவையை நோயாளிகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேவையை வழங்கக்கோரி போராட்டம்  சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கக்கோரி இன்று  வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.இதன்போது “வைத்தியசாலையில் சிறந்த சேவையை உறுதிப்படுத்துங்கள்” “திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது” “எலும்பு முறிவுக்காக தனியான களம் வேண்டும்” “நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யுரூநு கட்டடம் திறக்கப்பட வேண்டும்” “வைத்தியர்களுக்கு விடுதி வேண்டும்” “சிற்றூழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுங்கள்” “பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள்” நிலத்தில் காட்போட் அட்டையில் படுக்கும் நிலை வேண்டாம்” போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படடிருந்தது.குறித்த மகஜரில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் தரமானது குறித்த வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப இல்லை எனவும் இதனாலேயே பல சிரமங்களுக்கு நோயாளிகள் முகம் கொடுத்து வருவதாகவும் எனவே வைத்திசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தரமான சேவையை நோயாளிகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement