• Jul 10 2025

சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படைக்கு அனுமதி

Chithra / Jul 9th 2025, 9:50 am
image


பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்வதற்காக  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

சர்வதேச கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு, செங்கடல் மற்றும் ஈடின் வளைகுடா உளளிட்ட சோமாலியா சமுத்திர வலயத்தில் கடல் கொள்ளையர்களின் செயற்பாடுகளால், சர்வதேச சமுத்திரவியல் அமைப்பு, குறித்த கடற் பிராந்தியங்கள் அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களாக 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனப்படுத்தியுள்ளது. 

இவ் அச்சுறுத்தலுக்கு தீர்வாக அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களுக்குள் உள்நுழைகின்ற வணிகக் கப்பல்களால் வெளிநாட்டு தனியார் சமுத்திரப் பாதுகாப்புக் கம்பனிகள் மூலம் ஆயுதங்கள் தாங்கிய சமுத்திரப் பாதுகாவலர்களின் சேவைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 

குறித்த கருத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசியப் பாதுகாப்பு தொடர்பான முழுமையான பொறுப்பு இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இலங்கையை கடற்படையிடமுள்ள அறிவு மற்றும் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படைக்கு அனுமதி பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்வதற்காக  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு, செங்கடல் மற்றும் ஈடின் வளைகுடா உளளிட்ட சோமாலியா சமுத்திர வலயத்தில் கடல் கொள்ளையர்களின் செயற்பாடுகளால், சர்வதேச சமுத்திரவியல் அமைப்பு, குறித்த கடற் பிராந்தியங்கள் அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களாக 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனப்படுத்தியுள்ளது. இவ் அச்சுறுத்தலுக்கு தீர்வாக அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களுக்குள் உள்நுழைகின்ற வணிகக் கப்பல்களால் வெளிநாட்டு தனியார் சமுத்திரப் பாதுகாப்புக் கம்பனிகள் மூலம் ஆயுதங்கள் தாங்கிய சமுத்திரப் பாதுகாவலர்களின் சேவைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. குறித்த கருத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசியப் பாதுகாப்பு தொடர்பான முழுமையான பொறுப்பு இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இலங்கையை கடற்படையிடமுள்ள அறிவு மற்றும் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement