• Aug 02 2025

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வழங்குக - மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்து!

shanuja / Jul 31st 2025, 2:18 pm
image

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டுப்பிரசுரம் விநியோக நடவடிக்கை ஹட்டன் பஸ் நிலையப் பகுதியில் இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.


தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு,  மக்கள் போராட்ட இயக்கம் என்பன   இணைந்தே இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.


தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும், மாத சம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,  தோட்ட அடிமை முறைமை நீக்கப்பட வேண்டும், காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வழங்குக - மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்து மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டுப்பிரசுரம் விநியோக நடவடிக்கை ஹட்டன் பஸ் நிலையப் பகுதியில் இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு,  மக்கள் போராட்ட இயக்கம் என்பன   இணைந்தே இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும், மாத சம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,  தோட்ட அடிமை முறைமை நீக்கப்பட வேண்டும், காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement