• Jan 19 2026

கல்வியை ஆபாசமாக்கும் முயற்சிகளுக்கே எதிர்ப்பு- சஜித் தெரிவிப்பு!

shanuja / Jan 17th 2026, 10:19 pm
image

தரம் 1 தொடக்கம் 6 வரை கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை. 


கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். கல்வியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை முன்னெடுக்குமாறே வலியுறுத்தி வருகின்றோம்."


- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் மற்றுமொரு கட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம், கிதுல்கல பிரதேச வைத்தியசாலைக்கு 33 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"அரசாங்கம் பல வேடிக்கையான சம்பவங்களைச் செய்து வருகின்றது. கல்விச் சீர்திருத்தங்கள் முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல் முறைசாரா முறையில் முன்னெடுத்து வருகின்றது.


கல்வி சீர்திருத்தப்பட வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வந்த சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பினர் எம்மைப் பார்த்து கிண்டலாக சிரித்தனர். ஆங்கிலம், சீனம், ஜப்பான் மற்றும் இந்தி மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் எனக்குகே கிண்டல் அடித்துப் பேசி, சேறு பூசும் நடவடிக்கைகளைச் செய்தனர்.


எதிர்க்கட்சி கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒருபோதும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. கல்வியில் ஆபசத்தை புகுத்துவதற்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.


இந்தப் பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்குப் பல கட்ட நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியுள்ளன, ஆனால் இன்று அது எதுவும் முடிக்கப்படவில்லை. ஆகையால் இதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகள், மீளாய்வுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால், இந்த ஆபாச விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கா.


நோய்வாய்ப்பட்டவர்களைகே குணப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையில் நலவை நாடவுமே வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு உபகரணங்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகின்றோம்.


இதுவரை காலமும் அரச அதிகாரத்துடனே நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் பெறுமானம் சேர்க்கப்பட்டு வந்தன. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாம் நாட்டுக்கு பெறுமானம் சேர்க்கும் பணியை முன்னெடுத்து வருகின்றோம். மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காகவே இதனைச் செய்து வருகின்றோம்." - என்றார்.

கல்வியை ஆபாசமாக்கும் முயற்சிகளுக்கே எதிர்ப்பு- சஜித் தெரிவிப்பு தரம் 1 தொடக்கம் 6 வரை கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை. கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். கல்வியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை முன்னெடுக்குமாறே வலியுறுத்தி வருகின்றோம்."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் மற்றுமொரு கட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம், கிதுல்கல பிரதேச வைத்தியசாலைக்கு 33 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"அரசாங்கம் பல வேடிக்கையான சம்பவங்களைச் செய்து வருகின்றது. கல்விச் சீர்திருத்தங்கள் முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல் முறைசாரா முறையில் முன்னெடுத்து வருகின்றது.கல்வி சீர்திருத்தப்பட வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வந்த சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பினர் எம்மைப் பார்த்து கிண்டலாக சிரித்தனர். ஆங்கிலம், சீனம், ஜப்பான் மற்றும் இந்தி மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் எனக்குகே கிண்டல் அடித்துப் பேசி, சேறு பூசும் நடவடிக்கைகளைச் செய்தனர்.எதிர்க்கட்சி கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒருபோதும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. கல்வியில் ஆபசத்தை புகுத்துவதற்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.இந்தப் பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்குப் பல கட்ட நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியுள்ளன, ஆனால் இன்று அது எதுவும் முடிக்கப்படவில்லை. ஆகையால் இதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகள், மீளாய்வுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால், இந்த ஆபாச விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கா.நோய்வாய்ப்பட்டவர்களைகே குணப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையில் நலவை நாடவுமே வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு உபகரணங்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகின்றோம்.இதுவரை காலமும் அரச அதிகாரத்துடனே நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் பெறுமானம் சேர்க்கப்பட்டு வந்தன. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாம் நாட்டுக்கு பெறுமானம் சேர்க்கும் பணியை முன்னெடுத்து வருகின்றோம். மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காகவே இதனைச் செய்து வருகின்றோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement