• Jan 19 2026

அதிவேக நெடுஞ்சாலையில் அதிரடி சோதனை: சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

Chithra / Jan 18th 2026, 1:10 pm
image

 

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கடவத்தை பாதையினூடாக வெளியேறும் அனைத்து வாகனங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை சோதனை செய்யப்பட்டன.


போதைப்பொருள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது, கடவத்தை வெளியேறும் இடத்தில் 45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வாகன அனுமதி பத்திரங்களின்றி வாகனம் செலுத்தியவர்கள் மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

அதிவேக நெடுஞ்சாலையில் அதிரடி சோதனை: சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது  கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கடவத்தை பாதையினூடாக வெளியேறும் அனைத்து வாகனங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை சோதனை செய்யப்பட்டன.போதைப்பொருள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, கடவத்தை வெளியேறும் இடத்தில் 45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாகன அனுமதி பத்திரங்களின்றி வாகனம் செலுத்தியவர்கள் மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement