• Jan 19 2026

ரமழான் நோன்பு காலம் - அரச ஊழியர்களுக்கு விசேட வேலைநேர மாற்றம்

Chithra / Jan 18th 2026, 3:34 pm
image

 

ரமழான் காலத்தில் அரச உத்தியோகத்தர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக பண்டாரவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை ரமழான் பண்டிகைக்கான நோன்பு நோற்கப்படுகின்றது. 

 

இதன்போது, இஸ்லாமியர்கள் தங்களது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வகையில், தொழில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 


பணிநேர ஏற்பாடுகளைச் செய்ய முடியாத தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, ரமழான் பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்னர் தகுதியான ஊழியர்களுக்குப் பண்டிகைக்கான முன்பணம் வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரமழான் நோன்பு காலம் - அரச ஊழியர்களுக்கு விசேட வேலைநேர மாற்றம்  ரமழான் காலத்தில் அரச உத்தியோகத்தர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக பண்டாரவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை ரமழான் பண்டிகைக்கான நோன்பு நோற்கப்படுகின்றது.  இதன்போது, இஸ்லாமியர்கள் தங்களது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வகையில், தொழில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பணிநேர ஏற்பாடுகளைச் செய்ய முடியாத தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ரமழான் பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்னர் தகுதியான ஊழியர்களுக்குப் பண்டிகைக்கான முன்பணம் வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement