• Jan 19 2026

மார்ச் மாதத்தில் நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் - சாரதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

Chithra / Jan 18th 2026, 1:47 pm
image


அச்சிடுவதற்கு நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை, அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. 

 

அதன்படி, இதுவரை சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத 5 இலட்சம் சாரதிகளுக்கான அச்சிட்ட அட்டைகள் அஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக, அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, நிரந்தர அனுமதி அட்டைககள வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

 

தேவையான அட்டைகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் மார்ச் மாதத்தில், நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் - சாரதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி அச்சிடுவதற்கு நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை, அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.  அதன்படி, இதுவரை சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத 5 இலட்சம் சாரதிகளுக்கான அச்சிட்ட அட்டைகள் அஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.  முன்னதாக, அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, நிரந்தர அனுமதி அட்டைககள வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  தேவையான அட்டைகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் மார்ச் மாதத்தில், நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement