• Jan 19 2026

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு - மேலும் 882 பேர் கைது

Chithra / Jan 18th 2026, 3:57 pm
image

 

முடு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நாளாந்த சோதனை நடவடிக்கை தொடர்பான தகவல்களை பொலிஸார் வௌியிட்டுள்ளனர். 


நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் அடிப்படையில், போதைப்பொருள் தொடர்பில் 882 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


அத்துடன், 09 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார். 


மேலும், இந்த நடவடிக்கையின் போது 400 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 11 கிராம் ஐஸ் மற்றும் 500 கிராம் கொக்கைன் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு - மேலும் 882 பேர் கைது  முடு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நாளாந்த சோதனை நடவடிக்கை தொடர்பான தகவல்களை பொலிஸார் வௌியிட்டுள்ளனர். நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் அடிப்படையில், போதைப்பொருள் தொடர்பில் 882 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், 09 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் போது 400 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 11 கிராம் ஐஸ் மற்றும் 500 கிராம் கொக்கைன் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement