• Jan 19 2026

உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு! நிபுணர்கள் கூறுவது என்ன?

Chithra / Jan 18th 2026, 8:04 am
image

    

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல்  உலகளாவிய அறிவியல் மற்றும் கலாசார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


“தூய நிலத்தின் நட்சத்திரம்” என அழைக்கப்படும் இந்த இரத்தினம் 3,536 கரட் நிறையுடையது.


அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது.


இந்த இரத்தினக்கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினமாக இது உள்ளதென இரத்தினவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 


இந்த இரத்தினக்கல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இயற்கை புவியியல் செயன்முறைகளால் உருவானதாகவும் இதனை  செயற்கையாக வடிவமைக்க முடியாது என்றும், அவ்வாறு  உருவாக்க தேவையான நிலைகள் மிகவும் அரிதாக இருப்பதாகவும்  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த இரத்தினக்கல் அறிவியல், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இந்த இரத்தினக்கல்லைப்  பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவில் உள்ள டக்சன் மாஸ்டர்பீஸ் ஜெம் சொசைட்டி க்குக் (Tucson Masterpiece Gem Society)  கொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு நிபுணர்கள் கூறுவது என்ன     இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல்  உலகளாவிய அறிவியல் மற்றும் கலாசார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.“தூய நிலத்தின் நட்சத்திரம்” என அழைக்கப்படும் இந்த இரத்தினம் 3,536 கரட் நிறையுடையது.அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது.இந்த இரத்தினக்கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினமாக இது உள்ளதென இரத்தினவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரத்தினக்கல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இயற்கை புவியியல் செயன்முறைகளால் உருவானதாகவும் இதனை  செயற்கையாக வடிவமைக்க முடியாது என்றும், அவ்வாறு  உருவாக்க தேவையான நிலைகள் மிகவும் அரிதாக இருப்பதாகவும்  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த இரத்தினக்கல் அறிவியல், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இந்த இரத்தினக்கல்லைப்  பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவில் உள்ள டக்சன் மாஸ்டர்பீஸ் ஜெம் சொசைட்டி க்குக் (Tucson Masterpiece Gem Society)  கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement