• May 01 2025

மனைவியின் கண்முன்னே சுடப்பட்ட கடற்படை வீரர்! காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் மனதை உருக்கும் சோகச் சம்பவம்

Thansita / Apr 23rd 2025, 11:47 pm
image


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நேற்று நடந்த  தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வால் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரிது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வினய் நர்வாலுக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி தான் திருமணம் நடைபெற்றுள்ளது. 19 ஆம் திகதி தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது.தேன்நிலவுக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.

"திருமணம் முடிந்து அவன் சுவிட்சர்லாந்து போக ஆசைப்பட்டார். ஆனால் விசா கிடைக்காததால் காஷ்மீருக்குச் சென்றார்" என வினயின் தாத்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் சேர்ந்துள்ளார்.

வினய் நர்வால் அவரின் பெற்றோருக்கு ஒரே மகன். இவர் தன் மனைவியுடன் தேனிலவைக் கொண்டாட ஏப்ரல் 21ஆம் தேதி காஷ்மீர் சென்றதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குர்கிராமைச் சேர்ந்த நர்வாலின் மனைவி ஹிமான்ஷி தற்போது முனைவர் பட்டம் படித்து வருகிறார். மே 1 தான் நர்வாலின் பிறந்தநாள். தேனிலவிலிருந்து திரும்பிய பிறகு தன் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட நர்வால் திட்டமிட்டிருந்ததாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு பெண், இறந்த உடலுடன் அமைதியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வினய் நர்வால் மற்றும் அவருடைய மனைவி ஹிமான்ஷியின் புகைப்படம் தான் அது.

குறித்த நபரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த புகைப்படம் அனைவரின் மனதிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. 

சம்பவம் நடந்த உடனே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் வினய் நர்வாலின் மனைவி அந்த இடத்திற்கு வந்தவர்களிடம், "நான் இங்கு தான் பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கணவர் அந்தப் பக்கம் இருந்தார். ஒரு நபர் வந்து அவரைச் சுட்டுவிட்டார்," எனக் கூறுவது பதிவாகியுள்ளது.

"பஹல்காமில் நடைபெற்ற இந்தக் கோழைத்தனமான தாக்குதலில் லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தமை , அனைத்து கடற்படை வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது

மனைவியின் கண்முன்னே சுடப்பட்ட கடற்படை வீரர் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் மனதை உருக்கும் சோகச் சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நேற்று நடந்த  தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வால் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரிது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வினய் நர்வாலுக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி தான் திருமணம் நடைபெற்றுள்ளது. 19 ஆம் திகதி தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது.தேன்நிலவுக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்."திருமணம் முடிந்து அவன் சுவிட்சர்லாந்து போக ஆசைப்பட்டார். ஆனால் விசா கிடைக்காததால் காஷ்மீருக்குச் சென்றார்" என வினயின் தாத்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் சேர்ந்துள்ளார்.வினய் நர்வால் அவரின் பெற்றோருக்கு ஒரே மகன். இவர் தன் மனைவியுடன் தேனிலவைக் கொண்டாட ஏப்ரல் 21ஆம் தேதி காஷ்மீர் சென்றதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.குர்கிராமைச் சேர்ந்த நர்வாலின் மனைவி ஹிமான்ஷி தற்போது முனைவர் பட்டம் படித்து வருகிறார். மே 1 தான் நர்வாலின் பிறந்தநாள். தேனிலவிலிருந்து திரும்பிய பிறகு தன் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட நர்வால் திட்டமிட்டிருந்ததாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு பெண், இறந்த உடலுடன் அமைதியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வினய் நர்வால் மற்றும் அவருடைய மனைவி ஹிமான்ஷியின் புகைப்படம் தான் அது.குறித்த நபரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த புகைப்படம் அனைவரின் மனதிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. சம்பவம் நடந்த உடனே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் வினய் நர்வாலின் மனைவி அந்த இடத்திற்கு வந்தவர்களிடம், "நான் இங்கு தான் பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கணவர் அந்தப் பக்கம் இருந்தார். ஒரு நபர் வந்து அவரைச் சுட்டுவிட்டார்," எனக் கூறுவது பதிவாகியுள்ளது."பஹல்காமில் நடைபெற்ற இந்தக் கோழைத்தனமான தாக்குதலில் லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தமை , அனைத்து கடற்படை வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement