• Jan 16 2026

இந்தோனேசியாவில் வெடித்து சாம்பலை கக்கிய மெராபி எரிமலை!

dileesiya / Jan 14th 2026, 5:51 pm
image

இந்தோனேசியாவில் உள்ள மெராபி எரிமலை இன்று காலை வெடித்து, அதன் உச்சியிலிருந்து 1,600 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சாம்பலை கக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த எரிமலையின் வெடிப்பு, அதிகபட்சமாக 28.6 மில்லிமீட்டர் வீச்சுடன் சுமார் 31 வினாடிகள் நீடித்ததாக நில அதிர்வு கருவிகள் பதிவு செய்துள்ளன.

இதனை படாங்கில் உள்ள மவுண்ட் மராபி எரிமலை கண்காணிப்பு நிலைய (PGA) அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் கூட வெடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தது,” என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மெராபி எரிமலை இரண்டாம் நிலை எச்சரிக்கையில் உள்ளதாகவும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் எரிமலையின் செயல்பாட்டு மையத்திலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மேலும், எரிமலையின் சிகரத்திலிருந்து உருவாகும் ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு குளிர் எரிமலைக்குழம்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2,891 மீட்டர் உயரமுடைய மெராபி எரிமலை, சுமத்ரா தீவில் அமைந்துள்ளதுடன், நீண்ட காலமாக அதன் பள்ளத்திலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் நடைபயணம் செய்ய அதிகாரிகள் தடை விதித்து வருகின்றனர்.

இந்தோனேசியாவில் உள்ள சுமார் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான மெராபி, பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படும் அதிக நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகள் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது.

இந்தோனேசியாவில் வெடித்து சாம்பலை கக்கிய மெராபி எரிமலை இந்தோனேசியாவில் உள்ள மெராபி எரிமலை இன்று காலை வெடித்து, அதன் உச்சியிலிருந்து 1,600 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சாம்பலை கக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு சுமத்ரா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த எரிமலையின் வெடிப்பு, அதிகபட்சமாக 28.6 மில்லிமீட்டர் வீச்சுடன் சுமார் 31 வினாடிகள் நீடித்ததாக நில அதிர்வு கருவிகள் பதிவு செய்துள்ளன.இதனை படாங்கில் உள்ள மவுண்ட் மராபி எரிமலை கண்காணிப்பு நிலைய (PGA) அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.“அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் கூட வெடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தது,” என அவர் தெரிவித்துள்ளார்.தற்போது மெராபி எரிமலை இரண்டாம் நிலை எச்சரிக்கையில் உள்ளதாகவும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் எரிமலையின் செயல்பாட்டு மையத்திலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.மேலும், எரிமலையின் சிகரத்திலிருந்து உருவாகும் ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு குளிர் எரிமலைக்குழம்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.2,891 மீட்டர் உயரமுடைய மெராபி எரிமலை, சுமத்ரா தீவில் அமைந்துள்ளதுடன், நீண்ட காலமாக அதன் பள்ளத்திலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் நடைபயணம் செய்ய அதிகாரிகள் தடை விதித்து வருகின்றனர்.இந்தோனேசியாவில் உள்ள சுமார் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான மெராபி, பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படும் அதிக நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகள் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement