• Jan 16 2026

25 மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை

Chithra / Jan 16th 2026, 10:34 am
image

 

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டு வருகிறது. 

மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி  உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து மாவட்டங்களிலும் சாரதி  உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் சாரதி  உரிமங்களைப் பெற முடியும் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஆண்டு, சாரதி உரிமங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு 184 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டது.


இந்தாண்டு 28 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கவும்,  நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர்  தெரிவித்துள்ளார்.

25 மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை  தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி  உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து மாவட்டங்களிலும் சாரதி  உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் சாரதி  உரிமங்களைப் பெற முடியும் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு, சாரதி உரிமங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு 184 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டது.இந்தாண்டு 28 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கவும்,  நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement