2026 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறும் 28வது பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றக் குழுவினர் நேற்று (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
இந்தியப் பாராளுமன்றத்திலிருந்து வழங்கப்பட்ட அழைப்பையேற்று இக்குழுவினர் இந்தியா சென்றனர்.
இந்திய மக்களவையின் (லோக் சபா) சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், நான்கு பகுதியளவு தன்னாட்சியான பாராளுமன்றங்கள் உள்ளடங்கலாக 42 பொதுநலவாய நாடுகளின் 61 சபாநாயகர்களும், தலைமைதாங்கும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் சபாநாயகர்களின் பங்கு, பாராளுமன்றத்தின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், மக்கள் பிரதிநிதிகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம், பாராளுமன்றத்துடன் பொதுமக்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கைத் தூதுக் குழுவில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை பாராளுமன்றத்தின் நிர்வாக உதவிப் பணிப்பாளர் காஞ்சன ருசித ஹேரத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் அவர்கள் புதுடில்லி விமான நிலையத்தில் இலங்கைத் தூதுக் குழுவினரை அன்புடன் வரவேற்றார்.
இந்த மாநாட்டின்போது சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்திய மக்களவையின் சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா, ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹோய்ல், கனடா பாராளுமன்றத்தின் சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பாக்லியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட சபாநாயகர்ளுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் இலங்கையின் பங்கேற்பு, உலகளாவிய பாராளுமன்ற சமூகத்திற்குள் ஜனநாயகம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நாட்டின் தீவிர முயற்சிகளை நிரூபிக்கின்றது. அத்துடன், பொதுநலவாயக் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை வலுப்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்றக் குழு 2026 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறும் 28வது பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றக் குழுவினர் நேற்று (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.இந்தியப் பாராளுமன்றத்திலிருந்து வழங்கப்பட்ட அழைப்பையேற்று இக்குழுவினர் இந்தியா சென்றனர்.இந்திய மக்களவையின் (லோக் சபா) சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், நான்கு பகுதியளவு தன்னாட்சியான பாராளுமன்றங்கள் உள்ளடங்கலாக 42 பொதுநலவாய நாடுகளின் 61 சபாநாயகர்களும், தலைமைதாங்கும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் சபாநாயகர்களின் பங்கு, பாராளுமன்றத்தின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், மக்கள் பிரதிநிதிகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம், பாராளுமன்றத்துடன் பொதுமக்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.இந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கைத் தூதுக் குழுவில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை பாராளுமன்றத்தின் நிர்வாக உதவிப் பணிப்பாளர் காஞ்சன ருசித ஹேரத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் அவர்கள் புதுடில்லி விமான நிலையத்தில் இலங்கைத் தூதுக் குழுவினரை அன்புடன் வரவேற்றார்.இந்த மாநாட்டின்போது சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்திய மக்களவையின் சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா, ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹோய்ல், கனடா பாராளுமன்றத்தின் சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பாக்லியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட சபாநாயகர்ளுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.இந்த மாநாட்டில் இலங்கையின் பங்கேற்பு, உலகளாவிய பாராளுமன்ற சமூகத்திற்குள் ஜனநாயகம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நாட்டின் தீவிர முயற்சிகளை நிரூபிக்கின்றது. அத்துடன், பொதுநலவாயக் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை வலுப்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.