வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேருந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா நகரை நோக்கி சுமார் 7 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் பேருந்து சேவையானது மணித்தியாளத்திற்கு ஒரு தடவை என்ற வகையில் தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர், தொழிற்சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் 7 வருடங்களுக்கு பின்னர் சேவையை ஆரம்பித்த அரச பேருந்து வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேருந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது.இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா நகரை நோக்கி சுமார் 7 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.இப் பேருந்து சேவையானது மணித்தியாளத்திற்கு ஒரு தடவை என்ற வகையில் தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர், தொழிற்சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.