• Jan 16 2026

அஹங்கமவில் பயங்கரம்; மூதாட்டி படுகொலை! பெண் காயம் - கூரிய ஆயுதத்துடன் சந்தேகநபர் கைது

Chithra / Jan 16th 2026, 9:31 am
image

 

காலி - அஹங்கம, தித்தகல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) பதிவாகியுள்ளது.


தாக்குதலில் காயமடைந்த பெண்ணும் மூதாட்டியும் கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் அஹங்கம - தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் கூரிய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அஹங்கம தித்தகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 


இந்தக் குற்றச் செயலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அஹங்கம பொலிஸாரால் நடத்தப்பட்டு வருகின்றது.

அஹங்கமவில் பயங்கரம்; மூதாட்டி படுகொலை பெண் காயம் - கூரிய ஆயுதத்துடன் சந்தேகநபர் கைது  காலி - அஹங்கம, தித்தகல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) பதிவாகியுள்ளது.தாக்குதலில் காயமடைந்த பெண்ணும் மூதாட்டியும் கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அஹங்கம - தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் கூரிய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அஹங்கம தித்தகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்தக் குற்றச் செயலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லைஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அஹங்கம பொலிஸாரால் நடத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement