• Jan 16 2026

முன்னாள் காதலனின் நிர்வாணப் படங்களை வட்ஸ்அப்பில் வெளியிட்ட பெண்; யாழில் அதிர்ச்சிச் சம்பவம்

Chithra / Jan 15th 2026, 7:04 pm
image


யாழில் தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ்அப் குழுவொன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். 

 

கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டார். 

 

பாதிக்கப்பட்ட நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் தொடர்பு இருந்துள்ளது. 

 

பின்னர் ஏற்பட்ட பிரிவினால், கோபத்தில், அந்தப் பெண் இப்புகைப்படங்களை பகிரங்கப்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 

பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். 

 

அதனைத் தொடர்ந்து அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் காதலனின் நிர்வாணப் படங்களை வட்ஸ்அப்பில் வெளியிட்ட பெண்; யாழில் அதிர்ச்சிச் சம்பவம் யாழில் தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ்அப் குழுவொன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.  கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டார்.  பாதிக்கப்பட்ட நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் தொடர்பு இருந்துள்ளது.  பின்னர் ஏற்பட்ட பிரிவினால், கோபத்தில், அந்தப் பெண் இப்புகைப்படங்களை பகிரங்கப்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.  அதனைத் தொடர்ந்து அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement