• Jan 16 2026

வீட்டு மின்சாரத்திற்கே வழியின்றி மக்கள் தவிக்கையில் வீதி விளக்கு சுமையையும் சுமத்துவதா? - மின்சார ஊழியர் சங்கம் விசனம்

Chithra / Jan 16th 2026, 10:33 am
image

 

 

அதிகாரிகளின் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுகளுக்கு நுகர்வோர் ஏன் தண்டப்பணம் செலுத்த வேண்டும்?  அரசாங்கம் வீதி விளக்குகளுக்கான மின்கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்த தீர்மானித்துள்ளதாக மின்சார ஊழியர் சங்க செயளாலர் ரஞ்சன் ஜயலால் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் நேற்று  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திபில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


மின்சார சபையானது தொடர்ச்சியாகத் தவறான தரவுகளை முன்வைத்து மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் தற்போதைய நடைமுறை தேவையற்ற செலவுகளை உருவாக்குவதாக உள்ளது. 


இதனை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அத்துடன், மின்சார சபையை நான்கு பிரிவுகளாக  மறுசீரமைப்பதற்கு முன்னர், மின்சார சபையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து முறையான கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.


அத்தோடு  கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பாரிய ஊழல்கள் குறித்து ஜனாதிபதி ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்படுவதும் அவசியம். 


நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையிலும் அனல் மின் நிலையங்கள் மூலம் அதிக இலாபம் ஈட்ட அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அத்தோடு அரசாங்கம் வீதி விளக்குகளுக்கான மின்கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்த தீர்மானித்துள்ளது. 


அரசாங்கத்தின் இந்த மின் கட்டனக்  கொள்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். வீதி விளக்குகளைப் பராமரிப்பதும் அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாகும்.


பொதுமக்கள் வீடுகளில் உள்ள மின்சாரத்தையே மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்துகிறார்கள். பல வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டே இருக்கின்றன. ஆனால், வீதி விளக்குகள் பகல் நேரங்களிலும் அணைக்கப்படாமல் எரிவதைக் காண முடிகிறது. இவ்வாறான அதிகாரிகளின் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுகளுக்கு நுகர்வோர் ஏன் தண்டப்பணம் செலுத்த வேண்டும்?


தற்போதைய அரசாங்கம் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்குமாயின் அதற்கு எதிராக  பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ளோம் என்றார். 

வீட்டு மின்சாரத்திற்கே வழியின்றி மக்கள் தவிக்கையில் வீதி விளக்கு சுமையையும் சுமத்துவதா - மின்சார ஊழியர் சங்கம் விசனம்   அதிகாரிகளின் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுகளுக்கு நுகர்வோர் ஏன் தண்டப்பணம் செலுத்த வேண்டும்  அரசாங்கம் வீதி விளக்குகளுக்கான மின்கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்த தீர்மானித்துள்ளதாக மின்சார ஊழியர் சங்க செயளாலர் ரஞ்சன் ஜயலால் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் நேற்று  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திபில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,மின்சார சபையானது தொடர்ச்சியாகத் தவறான தரவுகளை முன்வைத்து மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் தற்போதைய நடைமுறை தேவையற்ற செலவுகளை உருவாக்குவதாக உள்ளது. இதனை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அத்துடன், மின்சார சபையை நான்கு பிரிவுகளாக  மறுசீரமைப்பதற்கு முன்னர், மின்சார சபையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து முறையான கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.அத்தோடு  கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பாரிய ஊழல்கள் குறித்து ஜனாதிபதி ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்படுவதும் அவசியம். நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையிலும் அனல் மின் நிலையங்கள் மூலம் அதிக இலாபம் ஈட்ட அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அத்தோடு அரசாங்கம் வீதி விளக்குகளுக்கான மின்கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்த தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த மின் கட்டனக்  கொள்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். வீதி விளக்குகளைப் பராமரிப்பதும் அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாகும்.பொதுமக்கள் வீடுகளில் உள்ள மின்சாரத்தையே மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்துகிறார்கள். பல வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டே இருக்கின்றன. ஆனால், வீதி விளக்குகள் பகல் நேரங்களிலும் அணைக்கப்படாமல் எரிவதைக் காண முடிகிறது. இவ்வாறான அதிகாரிகளின் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுகளுக்கு நுகர்வோர் ஏன் தண்டப்பணம் செலுத்த வேண்டும்தற்போதைய அரசாங்கம் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்குமாயின் அதற்கு எதிராக  பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ளோம் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement