• Jan 13 2026

கடையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு; யாழில் பட்டப்பகலில் சம்பவம்!

shanuja / Jan 12th 2026, 9:19 pm
image

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,


க கட்டைக்காட்டை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றுள்ளார்


யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்களை அருகில் உள்ள கடையில் கொள்வனவு  செய்துள்ளார். 


ஒரு சில நிமிடங்களின் பின்பு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை. 


மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தரால் முறைப்பாடளிக்கப்பட்டது


அதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு; யாழில் பட்டப்பகலில் சம்பவம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,க கட்டைக்காட்டை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றுள்ளார்யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்களை அருகில் உள்ள கடையில் கொள்வனவு  செய்துள்ளார். ஒரு சில நிமிடங்களின் பின்பு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தரால் முறைப்பாடளிக்கப்பட்டதுஅதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement