ஐக்கிய மக்கள் சக்தியின் கடுகம்பொல தொகுதி அமைப்பாளர் பேராசிரியர் சரித ஹேரத், இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்குப் போதிய அனுபவம் கிடைத்துள்ளது. சுமார் 40 இலட்சம் மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாகப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
அரச முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாகச் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே பணப்புழக்கம் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் கிராமப்புறங்களுக்குப் பணம் சென்றடையும் செயல்முறை செயலிழந்து, கிராமப்புற சமூகம் கடனில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப் பெற்றுக்கொள்ளக் கடன் சங்கங்களை நாட வேண்டியுள்ள அதேவேளை, நகர்ப்புற மக்கள் கடன் அட்டைகளின் (Credit Cards) உதவியுடன் வாழ்கின்றனர்.
இதுவே நாட்டின் இன்றைய யதார்த்தமாகும்.மறுபுறம், நாடு பாரிய நிர்வாக நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டின் நிதி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் கணக்காய்வாளர் நாயகம் பதவி மிக முக்கியமானது.
அரசியலமைப்பின் 153ஆவது பிரிவின் கீழ் இப்பதவி சுயாதீனமானது என்பதுடன், அவர் ஜனாதிபதிக்குக் கீழ் இயங்குபவர் அல்ல; மாறாக நாடாளுமன்றத்திற்கு நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டியவர். கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் இப்பதவிக்குத் தகுதியற்றவர்களை நியமிக்கவோ அல்லது அத்துமீறிய தலையீடுகளைச் செய்யவோ முற்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சியிலிருந்தபோது கணக்காய்வு மற்றும் நிர்வாகத் தூய்மை பற்றிப் பேசிய தேசிய மக்கள் சக்தி, தற்போது அதிகாரத்திற்கு வந்தவுடன் கணக்காய்வாளர் நாயகம் பதவியுடன் விளையாடுகின்றது.
2025 ஏப்ரல் 08ஆம் திகதி முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்ற பின்னர், தகுதியுள்ள அதிகாரியை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் மூன்று முறை பதில் கணக்காய்வாளர் நாயகங்களை நியமித்துள்ளது.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்குப் பதில் அதிகாரிகளை நியமிக்க முடியாது. தற்போதைய அரசியலமைப்புச் சபை அரசாங்கத்தின் இந்தச் சட்டவிரோத நகர்வுகளை நிராகரித்துள்ளது.
அரசாங்கம் இப்பதவிக்காக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைப் பரிந்துரைத்தது, ஆனால் கணக்காய்வாளர் நாயகம் என்பது சிவில் துறையின் மிக உயர்ந்த பதவியாகும்.
அதனைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட பெயரையும் அரசியலமைப்புச் சபை நிராகரித்தது. இதன் விளைவாக, 2025 டிசம்பர் 07ஆம் திகதி முதல் இன்றுவரை இலங்கையில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறானதொரு சூழல் உருவாகியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியலமைப்புச் சபை நியமிக்கப்படவுள்ள நிலையில், தமக்குச் சார்பான சிவில் பிரதிநிதிகளை அதில் உள்வாங்கி, அதன் மூலம் தமக்கு வேண்டிய ஒருவரை நியமிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நியமனத்தைத் தாமதப்படுத்துவதாகத் தெரிகிறது.
ஜனவரி 1ஆம் திகதி புதிய நிதியாண்டு ஆரம்பமாகியுள்ள போதிலும், கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால் முக்கிய நிதித் தீர்மானங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் முடங்கியுள்ளன. இது கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழுக்களின் செயற்பாடுகளையும் முழுமையாகப் பாதித்துள்ளது.
அரசாங்கம் தனது தோல்விகளுக்கான பழியை அரச அதிகாரிகள் மீது சுமத்தும் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர்கள் தமது பொறுப்புகளில் இருந்து நழுவிச் செல்வதால், செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் தீர்மானங்களை எடுக்கப் பயப்படுகின்றனர். இந்தச் சூழல் நாட்டை அராஜகத்தை நோக்கி இட்டுச் செல்லும்.
எனவே, கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குத் தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்குமாறும், அதிகாரிகளைப் பலிக்கடாவாக்காமல் அவர்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்பிற்கு உட்பட்ட கலாசாரத்தை உருவாக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது, என்றார்.
நாட்டின் கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நிலை: அரசியலமைப்பை மீறும் அரசு - பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் கடுகம்பொல தொகுதி அமைப்பாளர் பேராசிரியர் சரித ஹேரத், இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்குப் போதிய அனுபவம் கிடைத்துள்ளது. சுமார் 40 இலட்சம் மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாகப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். அரச முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாகச் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே பணப்புழக்கம் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் கிராமப்புறங்களுக்குப் பணம் சென்றடையும் செயல்முறை செயலிழந்து, கிராமப்புற சமூகம் கடனில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப் பெற்றுக்கொள்ளக் கடன் சங்கங்களை நாட வேண்டியுள்ள அதேவேளை, நகர்ப்புற மக்கள் கடன் அட்டைகளின் (Credit Cards) உதவியுடன் வாழ்கின்றனர்.இதுவே நாட்டின் இன்றைய யதார்த்தமாகும்.மறுபுறம், நாடு பாரிய நிர்வாக நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டின் நிதி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் கணக்காய்வாளர் நாயகம் பதவி மிக முக்கியமானது. அரசியலமைப்பின் 153ஆவது பிரிவின் கீழ் இப்பதவி சுயாதீனமானது என்பதுடன், அவர் ஜனாதிபதிக்குக் கீழ் இயங்குபவர் அல்ல; மாறாக நாடாளுமன்றத்திற்கு நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டியவர். கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் இப்பதவிக்குத் தகுதியற்றவர்களை நியமிக்கவோ அல்லது அத்துமீறிய தலையீடுகளைச் செய்யவோ முற்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சியிலிருந்தபோது கணக்காய்வு மற்றும் நிர்வாகத் தூய்மை பற்றிப் பேசிய தேசிய மக்கள் சக்தி, தற்போது அதிகாரத்திற்கு வந்தவுடன் கணக்காய்வாளர் நாயகம் பதவியுடன் விளையாடுகின்றது.2025 ஏப்ரல் 08ஆம் திகதி முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்ற பின்னர், தகுதியுள்ள அதிகாரியை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் மூன்று முறை பதில் கணக்காய்வாளர் நாயகங்களை நியமித்துள்ளது. 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்குப் பதில் அதிகாரிகளை நியமிக்க முடியாது. தற்போதைய அரசியலமைப்புச் சபை அரசாங்கத்தின் இந்தச் சட்டவிரோத நகர்வுகளை நிராகரித்துள்ளது.அரசாங்கம் இப்பதவிக்காக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைப் பரிந்துரைத்தது, ஆனால் கணக்காய்வாளர் நாயகம் என்பது சிவில் துறையின் மிக உயர்ந்த பதவியாகும். அதனைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட பெயரையும் அரசியலமைப்புச் சபை நிராகரித்தது. இதன் விளைவாக, 2025 டிசம்பர் 07ஆம் திகதி முதல் இன்றுவரை இலங்கையில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறானதொரு சூழல் உருவாகியுள்ளது.எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியலமைப்புச் சபை நியமிக்கப்படவுள்ள நிலையில், தமக்குச் சார்பான சிவில் பிரதிநிதிகளை அதில் உள்வாங்கி, அதன் மூலம் தமக்கு வேண்டிய ஒருவரை நியமிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நியமனத்தைத் தாமதப்படுத்துவதாகத் தெரிகிறது. ஜனவரி 1ஆம் திகதி புதிய நிதியாண்டு ஆரம்பமாகியுள்ள போதிலும், கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால் முக்கிய நிதித் தீர்மானங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் முடங்கியுள்ளன. இது கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழுக்களின் செயற்பாடுகளையும் முழுமையாகப் பாதித்துள்ளது.அரசாங்கம் தனது தோல்விகளுக்கான பழியை அரச அதிகாரிகள் மீது சுமத்தும் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளது. அமைச்சர்கள் தமது பொறுப்புகளில் இருந்து நழுவிச் செல்வதால், செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் தீர்மானங்களை எடுக்கப் பயப்படுகின்றனர். இந்தச் சூழல் நாட்டை அராஜகத்தை நோக்கி இட்டுச் செல்லும். எனவே, கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குத் தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்குமாறும், அதிகாரிகளைப் பலிக்கடாவாக்காமல் அவர்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்பிற்கு உட்பட்ட கலாசாரத்தை உருவாக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது, என்றார்.