யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பர் சாரதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த டிப்பர் ஒன்றினை மருதங்கேணி போலீசார் கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செத்துள்ளனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை குறித்த இடத்தை திடீரென சுற்றி வளைத்த மருதங்கேணி பொலிசார் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்றகொண்டிருந்த டிப்பருடன் சாரதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதி டிப்பருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தல் - டிப்பருடன் ஒருவர் கைது யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பர் சாரதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த டிப்பர் ஒன்றினை மருதங்கேணி போலீசார் கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செத்துள்ளனர். இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை குறித்த இடத்தை திடீரென சுற்றி வளைத்த மருதங்கேணி பொலிசார் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்றகொண்டிருந்த டிப்பருடன் சாரதியை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சாரதி டிப்பருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.