• Jan 13 2026

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வன்னியில் பல்வேறு உதவிகள்!

shanuja / Jan 12th 2026, 8:49 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தால் முல்லைத்தீவு

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் உள்ள புத்துவெட்டுவான் கிராமத்தில் 26 குடும்பங்களுக்கு  ரூபா 110,500  பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டது.


புத்து வெட்டுவான் முருகன் ஆலயத்தில் குறித்த உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் வழங்கி வைத்தார்.


இதேவேளை வவுனியா கணேசபுரம் சிறி சித்தி விநாயகர், கணேசபுரம் திருமூலர் ,பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் , வடகாடு ஸ்ரீ முத்துமாரியம்மன், பெரியதம்பனை வரசித்தி விநாயகர் கோவில்ப் புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன், செட்டிகுளம் ஞானபிள்ளையார்,  சிதம்பரபுரம் திருப்பழனி,  கோதாண்ட நொச்சிக்குளம்,  முதலியார்குளம் ஸ்ரீ வேல் முருகன், சிதம்பரபுரம் நாகம்பாள் ஆகிய 11 அறநெறி பாடசாலைகளுக்கும், தைப்பொங்கலை  முன்னிட்டு 121,000 ரூபா பெறுமதியான பண்டிகைப் பொதிகள் வழங்கப்பட்துடன்  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட தேவிபுரம் விக்கி குடியிருப்பைச் சேர்ந்த விழுப்புண் அடைந்த மற்றும் மாற்றுத் திறனாலிகளான முன்நாள் போராளிகள் குடும்பங்களை சேர்ந்த 30 குடும்பங்களுக்கும் பொங்கல் பொதிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கிவைத்தார். 

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வன்னியில் பல்வேறு உதவிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தால் முல்லைத்தீவுதுணுக்காய் பிரதேச செயலக பிரிவில் உள்ள புத்துவெட்டுவான் கிராமத்தில் 26 குடும்பங்களுக்கு  ரூபா 110,500  பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டது.புத்து வெட்டுவான் முருகன் ஆலயத்தில் குறித்த உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் வழங்கி வைத்தார்.இதேவேளை வவுனியா கணேசபுரம் சிறி சித்தி விநாயகர், கணேசபுரம் திருமூலர் ,பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் , வடகாடு ஸ்ரீ முத்துமாரியம்மன், பெரியதம்பனை வரசித்தி விநாயகர் கோவில்ப் புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன், செட்டிகுளம் ஞானபிள்ளையார்,  சிதம்பரபுரம் திருப்பழனி,  கோதாண்ட நொச்சிக்குளம்,  முதலியார்குளம் ஸ்ரீ வேல் முருகன், சிதம்பரபுரம் நாகம்பாள் ஆகிய 11 அறநெறி பாடசாலைகளுக்கும், தைப்பொங்கலை  முன்னிட்டு 121,000 ரூபா பெறுமதியான பண்டிகைப் பொதிகள் வழங்கப்பட்துடன்  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட தேவிபுரம் விக்கி குடியிருப்பைச் சேர்ந்த விழுப்புண் அடைந்த மற்றும் மாற்றுத் திறனாலிகளான முன்நாள் போராளிகள் குடும்பங்களை சேர்ந்த 30 குடும்பங்களுக்கும் பொங்கல் பொதிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கிவைத்தார். 

Advertisement

Advertisement

Advertisement